தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆங்கில மொழி மிகப்பெரிய ஆயுதம்: ராகுல்

1 mins read
ad4d93a2-087e-43ac-a2ec-2fbad86c06a5
 எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆங்கில மொழியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் பேசியுள்ளார்.

“ஆங்கிலம் படித்தால் எந்த மாநிலத்திற்கும், எந்த நாட்டிற்கும் வேண்டுமானாலும் சென்று பணிபுரிய முடியும். ஆங்கிலம் மிகப்பெரிய ஆயுதம்.

“ஆங்கில மொழிதான் அதிகாரத்தைக் கைப்பற்றவும் முன்னேறுவதற்குமான மிகப் பெரிய ஆயுதம். தாய்மொழியான இந்தியும் முக்கியம். அதேநேரத்தில் ஆங்கில மொழியைக் கற்பதும் மிக முக்கியம்,” என்றார் ராகுல்.

மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்