தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜிஎஸ்டி குறைப்புப் பலன்களைப் பயனீட்டாளர்கள் பெறச் செய்யுங்கள்: பியூஷ் கோயல்

1 mins read
f334764d-7ad8-429a-81d0-bbff1ca3370a
பியூஷ் கோயல். - கோப்புப் படம்: பிடிஐ

புதுடெல்லி: இந்தியாவில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதம் குறைக்கப்பட்டுள்ளது; பயனீட்டாளர்கள் அதன் பயனை அடையச் செய்யுமாறு இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் தொழில்துறைகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

திங்கட்கிழமை (செப்டம்பர் 22) முதல் இந்தியாவின் வரிக் கட்டமைப்பு பெரிய அளவில் மாற்றம் காண்கிறது. அதன்கீழ் நூற்றுக்கணக்கான பொருள்களுக்குப் பொருள், சேவை வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

“பலன்களைப் பயனீட்டாளர்கள் பெறச் செய்யுங்கள். அது, தொழில்துறைக்கும் சாதகமாக அமையும்,” என்று நிகழ்ச்சி ஒன்றில் திரு கோயல் கேட்டுக்கொண்டார்.

திங்கட்கிழமை முதல் இந்தியாவில் பொருள், சேவை வரி சில பொருள்களுக்கு ஐந்து விழுக்காடாகவும் சிலவற்றுக்கு 18 விழுக்காடாகவும் இருக்கும். சொகுசுப் பொருள்களுக்கு அவ்வரி 40 விழுக்காடு.

அதோடு, வர்த்தகம் செய்வதையும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் எளிதாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது என்றும் திரு கோயல் தெரிவித்தார். புதிய தளவாடக் கொள்கைகளை அறிவித்தது, புதிய தொழில்துறை நகரங்களை உருவாக்கியது, சிறு குற்றங்களைச் சட்டவிரோதமானவை அல்ல என வகைப்படுத்தியது உள்ளிட்டவை அது சார்ந்த முயற்சிகளில் அடங்கும் என்று அவர் விவரித்தார்.

உலக நாடுகள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவுடன் இருக்கும் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்த விரும்புவதாகவும் திரு கோயல் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்