‘ஆப்பரேஷன் சிந்தூர்’ குறித்த கட்டுரைப் போட்டி: மூன்று பேருக்குத் தலா ரூ.10,000 பரிசு

1 mins read
சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க அழைப்பும் விடுக்கப்படும்
0be973df-bddf-4a0e-9b7b-c1337707b724
இந்தியத் தற்காப்பு அமைச்சு எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) வெளியிட்ட பதிவில் இந்த விவரங்களை அறிவித்தது. - படம்: இந்தியத் தற்காப்பு அமைச்சு/எக்ஸ்

புதுடெல்லி: இந்தியத் தற்காப்பு அமைச்சு, ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற கருப்பொருளில் கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. ஜூன் 1 முதல் 30 வரை நடைபெறும் இப்போட்டியில் மூன்று வெற்றியாளர்களுக்குத் தலா ரூ.10,000 பரிசு வழங்கப்படும். அத்துடன், செங்கோட்டையில் இந்தியாவின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க பிரத்தியேகமாக அழைப்பும் விடுக்கப்படும்.

தற்காப்பு அமைச்சு எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) வெளியிட்ட பதிவில் இதனைத் தெரிவித்தது.

ஒருவர் ஒரு கட்டுரையை மட்டும் இந்தியில் அல்லது ஆங்கிலத்தில் https://mygov.in எனும் இணையப்பக்கத்தில் சமர்ப்பிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்