எத்தனால் என்ற பெயரில் ரூ.1,200 கோடிக்கு ஊழல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

எத்தனால் என்ற பெயரில் ரூ.1,200 கோடிக்கு ஊழல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

2 mins read
11e2abe3-94ab-48e4-b2be-a8dd126aea6d
மல்லிகார்ஜுன கார்கே. - கோப்புப் படம்: என்டிடிவி

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தில் பாஜகவும் அம்மாநில அரசு எந்திரமும் இணைந்து பொதுமக்களுக்குச் சொந்தமான அரிசியைக் கொள்ளையடிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.

எத்தனால் என்ற பெயரில் ரூ.1,200 கோடிக்கு நடந்துள்ள ஊழல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர் தமது எக்ஸ் தளப்பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் பெட்​ரோலுடன் கலக்கும் பொருட்டு, எத்​த​னால் உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. இந்த உற்பத்தியை அதி​கரிக்​க இந்திய அரசு பல்வேறு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது.

எத்​த​னால் ஆலைகளுக்கு அரிசி அனுப்​பப்​படு​வதும் மானியத் திட்டங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் உள்ள ஓர் எத்தனால் ஆலைக்கு அனுப்பப்பட்ட அரிசி மூட்டைகள் அங்கு சென்றடையவில்லை என்று இந்திய உணவு கழகம் எழுப்பிய புகாரையடுத்து நான்கு பேர் கைதாகினர்.

மேலும், மானிய விலைக்கான தனியார் ஆலைகளுக்குத் திருப்பிவிடப்பட்டு மீண்டும் அரசு நிறுவனங்களுக்கே விற்கப்படுவதாக எதிர்க்கட்சிகளும் மத்தியப் பிரதேச அரசுக்கு எதிராக வரிந்துகட்டின. இதையடுத்து, அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழு நடத்தி வருகிறது.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தை ஊழலின் மாதிரி​யாக பாஜக மாற்​றிவிட்டது என்று குறிப்பிட்டுள்ள திரு கார்கே, வழக்​கம்போல் பிரதமர் மோடி நடப்பதையெல்லாம் அமை​தி​யாக வேடிக்கை பார்ப்பதாக விமர்சித்துள்ளார்.

ஊட்​டச்​சத்து குறை​பாடுள்ள குழந்​தைகள், கர்ப்​பிணிப் பெண்கள், இளம் பெண்​களின் ஊட்​டச்​சத்​துக்​காகப் பயன்​படுத்தப்பட வேண்​டிய அரிசி, ஊழலுக்குப் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளதாக திரு கார்கே சாடியுள்ளார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மத்​தி​யப் பிரதேசம் தற்​போது ஊழலின் மைய​மாக மாறி​யுள்​ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், அரிசி ஆலை அதிபர்​கள், எத்​த​னால் மாஃபி​யாக்​கள், பாஜக அரசின் ஆதர​வுடன் ஐந்து லட்​சம் டன் அரிசி இந்த ஊழல் விளை​யாட்​டில் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளதாகவும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்