இந்தியக் கடற்படைக்கு ஜெர்மனியில் இருந்து யுஎஸ் $10 மில்லியன் நீர்மூழ்கிக் கப்பல்கள்

இந்தியக் கடற்படைக்கு ஜெர்மனியில் இருந்து யுஎஸ் $10 மில்லியன் நீர்மூழ்கிக் கப்பல்கள்

1 mins read
685fae61-172d-4ed4-82d2-c76b1da48dc6
இந்தியக் கடற்படையின் திறனை அதிகரிக்கும் வகையின் அதிதிறன் வாய்ந்த நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் தற்காப்பு ஒப்பந்தத்தை இந்தியா ஜெர்மனியுடன் கிட்டத்தட்ட இறுதிசெய்யும் நிலையில் உள்ளது. - மாதிரி படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியக் கடற்படைக்கு, ஜெர்மனியில் இருந்து 10 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.83,000 கோடி) மதிப்பிலான ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் உறுதியாகி வருகிறது.

இந்தியக் கடற்படையின் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் கொள்முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஜெர்மனியின் தொழில்நுட்பத் திறன், உயர்தர நீர்மூழ்கிக் கப்பல்கள் உற்பத்தித் திறன் ஆகியவை இந்தியாவின் கடற்படை தேவைகளுக்கு ஏற்றவாறு இருப்பதால் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மார்ச் மாதத்தில் இந்த ஒப்பந்தம் முறையாக கையெழுத்தாகும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள், அதிநவீன உணர்கருவிகள், ஸ்டெல்த் தொழில்நுட்பம், ஏவுகணை தாக்குதல் திறன் ஆகியவற்றைக் கொண்டவை. அந்தக் கொள்முதல் இந்தியாவின் கடல் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனாவின் வளர்ச்சியை சமநிலைப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

ஜெர்மனி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி, தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெறும். இதன்மூலம் இந்தியக் கடற்படைக்குத் தேவையான நீர்மூழ்கிக் கப்பல்களின் பெரும்பகுதி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

ஜெர்மனியுடனான இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு, வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

குறிப்புச் சொற்கள்