தேர்தல் முடிவு வெளிவரும் முன்பே கேரளாவில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி

காங்கிரஸ் கூட்டணிக்குள் முதல்வர் நாற்காலிக்கான உட்கட்சி விவாதம்

தேர்தல் முடிவு வெளிவரும் முன்பே கேரளாவில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி

1 mins read
dbfc1370-04f2-4f26-9fbb-7379d4e5cda1
கேரளக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சன்னி ஜோசப்பு, நிர்வாகிகள் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.  - படம்: தி இந்து

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்தது. முடிவுகள் வெளிவர மூன்று வாரங்கள் உள்ள நிலையிலும், பெரும்பான்மை யாருக்கு என்பது இன்னும் முடிவாகாத சூழலிலும் காங்கிரஸ் கூட்டணியில் அடுத்த முதல்வர் குறித்த விவாதம் இப்போதே சூடுபிடித்துள்ளது.

இடதுசாரிகளிடமிருந்து ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முதல்வர் நாற்காலிக்காக காய் நகர்த்தி வருகின்றனர்.

கே.சி. வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா, வி.டி. சதீசன் ஆகியோரின் ஆதரவாளர்கள், சமூக ஊடகங்களில் தங்கள் தலைவர்களையே அடுத்த முதல்வர் என முன்னிறுத்தி வருகின்றனர்.

இந்த உட்கட்சிப் போட்டி பொதுமக்களிடையே எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும் என மூத்த தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

“தேர்தல் முடிவுக்கு முன்பே முதல்வர் பதவி குறித்து விவாதிப்பது தேவையற்றது. ராகுல் காந்தி அறிவுறுத்தியதுபோல, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களே முதல்வரைத் தேர்வு செய்வார்கள்,” என்று காங்கிரஸ் பொதுச் செயலா் கே.முரளீதரன் எச்சரித்தார்.

கேரளக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சன்னி ஜோசப்பும், நிர்வாகிகளும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே பதவிக்காக மோதிக்கொள்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என கட்சியின் மற்றுமொரு மூத்த தலைவர் கே. பாபுவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்