தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமான நிலையத்தில் பறவைகளை விரட்ட தினமும் ரூ.3.24 லட்சம் செலவு

1 mins read
0c321088-532a-4a92-8a25-5c50f4dc2aef
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பறவைகளை விரட்டப் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. - படம்: தினத்தந்தி

திருவனந்தபுரம்: கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தின் விமான நிலையத்தில் பறவைகளை விரட்டப் பட்டாசுகள் வெடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பணிக்காக ஏறக்குறைய 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து சேவை வழங்கும் விமானங்களுக்குப் பறவைகள் பெருந்தொல்லையாக உள்ளன.

எனவே, விமானங்கள் புறப்படும்போதும் தரையிறங்கும்போதும் பறவைகளால் பாதிப்பு ஏற்படாமலிருக்க, அவற்றை விரட்டுவதற்காக 12 இடங்களில் அந்த ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ராக்கெட்டுகள், குண்டுகள், மேலே சென்று மூன்றாகப் பிரிந்து வெடிக்கும் ‘ஸ்கை ஷாட்’ வகைப் பட்டாசுகள் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் தொடர்பில் அன்றாடம், ரூ.3.24 லட்சம் செலவு செய்யப்படுகிறது. ஓராண்டுக்கான செலவு ரூ.11,82,60,000 என்று கூறப்பட்டது.

பட்டாசு வெடிக்கும் ஊழியர்கள் இருவேறு வேலை நேரங்களைப் பின்பற்றி வேலை செய்கின்றனர்.

இவர்களுக்குத் தலா ரூ.24,000 மாதச் சம்பளமாக வழங்கப்படுகிறது. பட்டாசு வெடிக்கும் ஊழியர்களுக்கு மட்டும் ஒரு மாதச் சம்பளத்திற்கு ஆகும் செலவு ரூ.7 லட்சத்துக்குமேல் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்