தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசியான் நாடுகளுக்கிடையே மின்சார ஏற்றுமதி: உள்கட்டமைப்புக்கு தேவைப்படும் அதிக முதலீடுகள்

2 mins read
a5af979e-295d-419e-b8a3-ecb5130461fc
வளரும் நாடுகளில் எரிசக்தி மாற்றங்களுக்கான நிதியாதரவு மாநாட்டில் சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட பேராளர்கள் கலந்துகொண்டனர். - படம்: ஐரினா

அபுதாபி: ஆசியான் நாடுகளுக்கு இடையே மின்சார ஏற்றுமதிக்கான வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் நாடுகளுக்கு இடையே செய்யப்பட்ட சில ஒப்பந்தங்கள் அதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.

ஆனால் மின்சார ஏற்றுமதியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்திற்கு அதிக உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. இதற்கு ஏராளமான முதலீடுகளும் அவசியமாகின்றன என்று ஜனவரி 12ஆம் தேதி எரிசக்தி மாநாட்டில் பேசிய பேராளர்கள் வலியுறுத்தினர்.

மின்சார ஏற்றுமதிக்கு நாடுகளுக்கு இடையே நீண்ட தரை, கடலடி கம்பி வடங்கள் அமைக்கப்பட வேண்டும். மின்சார விநியோகத்துக்கு, குறிப்பாக புதுப்பிக்கத்த எரிசக்திக்கு இது அவசியமாகிறது.

உள்கட்டமைப்பில் அதிகரித்துள்ள முதலீடுகள், புதைபடிவ எரிபொருட்களை இன்னும் நம்பியிருக்கும் வளரும் நாடுகள், மிகவும் மலிவு விலையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற உதவும் என்று உறுப்பினர்கள் கூறினர்.

எல்லைத் தாண்டிய மின்சார வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு நாடுகளுக்கிடையே இணைப்புகளை வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய அரபு சிற்றரசுகளில் உள்ள அபுதாபியில் 15வது ‘ஐரினா’ (Irena) வளரும் நாடுகளில் எரிசக்தி மாற்றத்திற்கான நிதித் தொடர்பான விவாதத்தில் அவர்கள் பேசினர். ஐரினா (Irena) என்பது அனைத்துலக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம்.

பிலிப்பீன்சில் உள்ள எரிசக்தித் துறையின் செயலாளரான டாக்டர் ரோவெனா குவேரா, அதிக நிதியாதரவால் மலிவான விலையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு நாடுகள் மாற உதவும் என்றார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கும் நிறுவனங்களுக்கு இத்தகைய உள்கட்டமைப்புக்கு நிதியளிக்க பலதரப்பட்ட வங்கிகள் உதவினால், அது தனியார் துறைக்கான மூலதனச் செலவைக் குறைக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிலிப்பீன்ஸ், அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்கை 2030க்குள் 35 விழுக்காடாகவும், 2040க்குள் 50 விழுக்காடாகவும் அதிகரிக்க முடியும் என நம்புகிறது.

ஆசியான் எரிசக்தி விநியோகம் பத்து ஆண்டுகளுக்கு மேல் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 2022ல் லாவோஸ்-தாய்லாந்து-மலேசியா-சிங்கப்பூர் (LTMS) மின்சார இறக்குமதியுடன் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இதையடுத்து, புருணை-இந்தோனீசியா-மலேசியா-பிலிப்பைன்ஸ் மின் ஒருங்கிணைப்பு திட்டம் ஆகஸ்ட் 2023ல் அறிவிக்கப்பட்டது. இது, நான்கு நாடுகளுக்கு இடையே பல அடுக்கு மின்கட்டமைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்