விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேக நபர் கைது

1 mins read
1caf9357-d6b2-4c7b-aad1-a457580f0c26
இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: அண்மையில் இந்தியாவின் பல விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

அதன் தொடர்பில் தலைநகர் டெல்லியைச் சேர்ந்த 25 வயது ஆடவர் ஒருவர் சனிக்கிழமையன்று (அக்டோபர் 26) கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறையினர் கூறியுள்ளனர். ‌ஷுபம் உபத்யய் என்ற அந்த ஆடவர், வேலை இல்லாதவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆடவர்தான் பல விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சென்ற வாரம், நான்கு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததன் தொடர்பில் 17 வயதான அந்த சந்தேக நபரை மும்பை நகரக் காவல்துறையினர் கைது செய்தனர். இம்மாதம் 14ஆம் தேதி முதல் 275 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

12ஆம் நிலை மாணவரான அந்த 17 வயது நபர், சமுக ஊடகப் பதிவுகள் மூலம் டெல்லி செல்லும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிறகு போலி வெடிகுண்டு மிரட்டல்களைப் பற்றித் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்து உபத்யயும் அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்