போலி ‘மைக்ரோசாஃப்ட்’ தொழில்நுட்ப உதவிக் குழுவினர் பெங்களூரில் கைது

1 mins read
386db517-3698-473b-9ed8-cf15c2ab9f49
கோப்புப் படம்: - சாவ்பாவ்

பெங்களூரு: இந்தியாவின் பெங்களூரு நகரில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப ரீதியாக வாடிக்கையாளர்களுக்கு உதவி வழங்கும் அதிகாரிகளாக (technical support) நடித்த கும்பல் சனிக்கிழமை (நவம்பர் 15) பிடிபட்டது.

பெரிய அளவில் இணைய மோசடியில் ஈடுபட்டு வந்த அந்தக் கும்பலை பெங்களூரு காவல்துறை கண்டுபிடித்தது. இணையக் குற்றத் தடுப்பு தளபத்தியத்தின் சிறப்புப் பிரிவும் பெங்களூருவின் வைட்ஃபீல்ட் வட்டாரக் காவல்துறையும் இணைந்து இந்த முறியடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட மஸ்க் கம்யூனிகே‌ஷன்ஸ் (Musk Communications) எனும் நிறுவனத்தைக் குறிவைத்து முறியடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த மோசடி நிலையம், 4,500 சதுர அடிகள் கொண்ட இடத்தில் செயல்பட்டு வந்தது.

மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப உதவி அதிகாரிகளைப் போல் நடித்து வெளிநாட்டவரை ஏமாற்றி வந்த 21 மஸ்க் கம்யூனிகே‌ஷன்ஸ் ஊழியர்களைக் காவல்துறை கைது செய்தது. இந்தக் கும்பல், அமெரிக்கக் குடிமக்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாக என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்