தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏர் இந்தியா விமானச் சீட்டுகளுக்கான முன்பதிவில் வீழ்ச்சி

1 mins read
f9b18e6e-0921-46ae-97f7-4dd3fb921f25
ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானச் சேவைகளுக்கான முன்பதிவுகள் 10 முதல் 12 விழுக்காடு வரை குறைந்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் உள்நாட்டு, அனைத்துலக விமானச் சேவைகளுக்கான முன்பதிவுகள் கிட்டத்தட்ட 20 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.

இத்தகவலை இந்தியச் சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்கத் தலைவர் ரவி கோசைன் தெரிவித்தார்.

“ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானச் சேவைகளுக்கான முன்பதிவுகள் 10 முதல் 12 விழுக்காடு வரையும், அனைத்துலக விமானச் சேவைகளுக்கான முன்பதிவு 18 முதல் விழுக்காடு வரையும் குறைந்துள்ளது,” என்று திரு ரவி கூறினார்.

“விமானச் சீட்டுகள் போதிய அளவில் விற்காததால் ஏர் இந்தியா விமானச் சீட்டுக் கட்டணங்களைச் சராசரியாக 8 முதல் 15 விழுக்காடு வரை குறைத்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஏர் இந்தியா விமானச் சீட்டுகளை ரத்து செய்வது 15 முதல் 18 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இருப்பினும், இது தற்காலிகமான நிலைமை. வரும் நாள்களில் இதில் மாற்றம் ஏற்படலாம் என்று திரு ரவி சொன்னார்.

குறிப்புச் சொற்கள்