விவசாயிகளின் போராட்டம்: 9வது சுற்று பேச்சு நடந்தது

விவசாயிகளின் போராட்டம்: 9வது சுற்று பேச்சு நடந்தது

2 mins read
5ea2d8dc-70f8-41b6-b24b-c40b2b0446dd
விவ­சா­யி­கள் இரண்டு மாத கால­மாகப் போராடி வரு­கி­றார்­கள். படம்: ஏஎன்ஐ -

புது­டெல்லி: இந்­தி­யா­வின் தலை­நகர் புது­டெல்­லியை முற்­று­கையிட்டு ஏறக்­கு­றைய இரண்டு மாத கால­மாக நடந்து வரும் விவ­சா­யி­கள் போராட்­டம் நேற்று புதிய கட்­டத்தை எட்­டி­யது. விவ­சா­யப் பிர­மு­கர்­களும் மத்­திய அர­சாங்க அமைச்­சர்­களும் நேற்று ஒன்பதாவது சுற்று பேச்­சு­வார்த்­தை­யைத் தொடங்­கி­னர்.

நேற்­றைய பேச்­சு­வார்த்­தை­யின் போது இரு தரப்­பி­ன­ரும் தங்­கள் நிலை­யில் உறு­தி­யாக இருந்­த­தா­க­வும் இருந்­தா­லும் நேரடி பேச்­சு­வார்த்தை நடை­மு­றை­யைத் தொடர்­வ­தற்குத் தாங்­கள் தயார் என்று இரு தரப்­பி­ன­ரும் மீண்­டும் உறுதி கூறி­ய­தா­க­வும் தக­வல் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

அதே­வே­ளை­யில், புது­டெல்­லி­யில் போராட்­டம் நடத்­திய ராகுல் காந்தி, பிரி­யங்கா காந்தி உள்­ளிட்ட காங்­கி­ரஸ் பிர­மு­கர்­கள், பாஜக அரசு நிறை­வேற்றி இருக்­கும் மூன்று வேளாண் மசோ­தாக்­களும் விவ­சா­யி­களை வாழ­வைப்­ப­தற்­காக அல்ல என்­றும் அவர்­களை நசுக்கு­வ­தற்­கா­கவே மத்­திய அர­சு அந்த மசோ­தாக்­க­ளைச் சட்­ட­மாக்கி இருக்­கிறது என்­றும் குரல் எழுப்பி­னர்.

காங்­கி­ரஸ் தலை­வர்­கள் டெல்­லி­யில் விவ­சா­யி­க­ளுக்கு ஆத­ர­வாக நேற்று போராட்­டத்­தில் குதித்­த­னர்.

"மூன்று சட்­டங்­க­ளை­யும் மத்­திய அர­சாங்­கம் மீட்­டுக்­கொள்ள வேண்டி இருக்­கும். அது­வ­ரை­யில் போராட்­டம் ஓயாது," என்று அவர்­கள் சூளு­ரைத்­த­னர்.

விவ­சா­யி­கள் இரண்டு மாத கால­மாகப் போராடி வரு­கி­றார்­கள். அந்­தப் போராட்­டத்தை ஒரு முடி­வுக்குக் கொண்டு வர அர­சாங்­கம் இது­வ­ரை­யில் எட்டு சுற்று பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி இருக்­கிறது. ஆனால் உருப்­ப­டி­யான முடி­வு­கள் ஏற்படவில்லை.

வேளாண் மசோ­தாக்­க­ளுக்கு உச்­ச­ நீ­தி­மன்­றம் இடைக்­கால தடை விதித்து இருக்­கிறது. ஒரு குழு­வை­யும் அமைத்து இருக்­கிறது. ஆனால், அந்­தக் குழுவை விவ­சா­யி­கள் நிரா­க­ரித்­து­விட்­ட­னர்.

அந்­தக் குழு­வில் ஒரு­வ­ராக இடம்­பெற்ற புபேந்­தர் சிங் மான் என்­ப­வர் விலகிவிட்­டார்.

இந்­திய குடி­ய­ரசு தின­மான ஜன­வரி 26ஆம் தேதி புது­டெல்­லிக்கு அணி­வ­குத்துச் சென்று போராட்­டத்தை மேலும் கடு­மை­யாக்­கப் போவ­தாக விவ­சா­யி­கள் எச்­ச­ரித்து இருக்­கி­றார்­கள்.

இத­ற்கிடையே, இந்­தியா நிறை­வேற்றி இருக்­கும் வேளாண் மசோ­தாக்­கள் குறிப்­பி­டத்­தக்க ஒரு செயல் என்­றும் ஆனால் விவ­சா­யி­கள் அவற்­றால் பாதிக்­கப்­ப­டா­மல் பாது­காக்­கப்­பட வேண்­டும் என்­றும் அனைத்­து­லக பண நிதி­யம் கருத்து தெரிவித்தது.

மூன்று சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்