நெருக்கடியிலும் வேகமாக வளரும் பொருளியல்: இந்திய ஆலோசகர்

நெருக்கடியிலும் வேகமாக வளரும் பொருளியல்: இந்திய ஆலோசகர்

2 mins read
25bade16-6213-48cc-ba09-2e1229f36bd1
இந்திய அரசாங்கத்தின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் - படம்: இந்து தமிழ்திசை
Google News Preferred Icon

சென்னை: உலகப் பொருளியல் நெருக்​கடிகளுக்கு இடை​யிலும் இந்​தியப் பொருளியல் மிக வேக​மாக வளர்ந்து வரு​கிறது என மத்​திய அரசின் தலை​மைப் பொருளியல் ஆலோ​சகர் வி.அனந்த நாகேஸ்​வரன் தெரி​வித்​துள்ளார்.

சென்னை கிண்​டி​யில் இந்​தி​யத் தொழில் கூட்​டமைப்​பின் மாநாடு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) நடை​பெற்​றது. இதில் அவர் பேசி​னார்.

“உலகில் பல நாடு​கள் பொருளியல் பின்​னடைவைச் சந்​தித்துவரும் நிலை​யில், இந்தியா கடந்த ஆண்​டில் 7.7 விழுக்காட்டு வளர்ச்​சியை அடைந்​துள்​ளது.

“இது வெறும் அதிர்​ஷ்டத்​தால் கிடைத்​தது அல்ல. உள்​கட்​டமைப்​புக்​காக இந்திய அரசு பல லட்​சம் கோடிகளை முதலீடு செய்​ததே முதன்மைக் காரண​மாகும்.

“மேற்கு ஆசி​யா​வில் நடை​பெற்றுவரும் அமெரிக்கா - ஈரான் இடையி​லான போர், உலகப் பொருளியலில் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தியது. இந்​தப் போர் காரண​மாக, கச்சா எண்​ணெய் விலை கடுமை​யாக உயர்ந்து பீப்​பாய்க்கு 113 டாலர் வரை சென்றது.

“இதனால், இந்​தி​யா​வுக்குத் தேவை​யான கச்சா எண்​ணெய், இயற்கை எரி​வாயு, உரங்கள் ஆகியவை வந்துசேரு​வ​தி​லும் வளை​குடா நாடு​களில் பணிபுரி​யும் இந்​தி​யர்​கள் தாயகத்​துக்கு அனுப்​பும் பண அளவிலும் நிச்​சயமற்ற தன்மை நில​வியது. போர் அச்​சத்​தால் உலகெங்கிலும் உள்ள முதலீடு​கள் பாது​காப்​பான நாடு​களை நோக்கி ஓடின.

“ஆனால், போர் அச்​சுறுத்​தல்​களுக்கு இடை​யிலும் இந்​தி​யப் பொருளியலில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் முன்​னேறியது. கச்சா எண்​ணெய் விலை உயர்ந்​த​போ​தி​லும் இந்தியாவின் பொருளா​தா​ரம் சிறப்​பான வளர்ச்​சியைப் பதிவு செய்​தது.

“ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலும் 2.1 லட்​சம் கோடியைத் தாண்​டிச் சாதனை படைத்​துள்​ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், “சாலைகள், மின்​சார வசதி போல தண்​ணீரை​யும் ஒரு முக்​கிய உள்​கட்​டமைப்​பாகக் கருத வேண்​டும். 2019ஆம் ஆண்டு சென்னை சந்​தித்த தண்​ணீர்ப் பஞ்​சத்தை மறந்​து​விடக் கூடாது,” என்று முனைவர் அனந்த நாகேஸ்​வரன் சுட்டிக்காட்டினார்.

“நீர்​நிலைகளை ஆக்​கிரமித்​துக் கட்டடங்​கள் கட்​டு​வ​தால்​தான் மழைக்​காலத்​தில் வெள்​ள​மும், கோடை​யில் வறட்​சி​யும் ஏற்​படு​கிறது. தண்​ணீரை இலவச​மாகக் கொடுக்​கும்​போது, அது அபரிமித​மாக இருப்​ப​தாகக் கருதி மக்​கள் அதை வீணாக்​கு​கிறார்​கள்.

“இரண்​டா​யிரம் ஆண்​டு​களுக்கு முன்பே திரு​வள்​ளுவர் ‘வான்​சிறப்​பு’ அதி​காரத்​தில் ‘நீரின்று அமை​யாது உலகு’ என நீரின் முக்​கி​யத்​து​வத்​தைக் கூறி​யுள்​ளார். அதன்​படி, தண்​ணீரைச் சேமித்​து, அதற்​கான சரி​யான கட்​ட​ணத்தை நேர்​மை​யாக வசூலித்​து, நிலை​யான கட்​டமைப்பை உரு​வாக்​கி​னால் மட்​டுமே அடுத்த தலை​முறைக்கு நாம் ஒரு பாது​காப்​பான நாட்டை விட்​டுச்செல்ல முடி​யும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாபொருளியல்உள்கட்டமைப்புதண்ணீர்

தொடர்புடைய செய்திகள்