திருப்பதி: திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ‘ஃபாஸ்டேக்’ கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருமலையை அடைவதற்கு முன்னர் அலிபிரி சோதனைச் சாவடியில் ‘ஃபாஸ்டேக்’ வழங்கும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு சிறந்த பாதுகாப்பு வழங்கவும் கூட்ட நெரிசலைக் குறைத்து நேரத்தை மிச்சப்படுத்தவும் மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்கவும் ‘ஃபாஸ்டேக்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
‘ஃபாஸ்டேக்’ இல்லாத வாகனங்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது.
‘ஃபாஸ்டேக்’ இல்லாத வாகன ஓட்டிகள், மிகக் குறுகிய காலத்தில் இந்த வசதியைப் பெற்ற பின்னரே திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.