தேர்வில் வெற்றிபெற்ற மகனுக்கு ஐபோன் பரிசளித்த குப்பைக்காரர்

தேர்வில் வெற்றிபெற்ற மகனுக்கு ஐபோன் பரிசளித்த குப்பைக்காரர்

1 mins read
75060105-0285-400a-ab17-44077a57e5c5
மகனுக்கு ஐபோன் பரிசளித்த தந்தை. - படம்: ஊடகம்

புதுடெல்லி: எக்ஸ் ஊடகத்தில் ‘கர் கே கலேஷ்’ என்ற கணக்கில் ‘தந்தையின் விலைமதிப்பற்ற பரிசு’ என்ற வாசகத்துடன் ஒரு காணொளி பகிரப்பட்டிருந்தது.

அதில், குப்பை சேகரிக்கும் ஒருவரின் பேச்சை சுற்றி நிற்பவர்கள் காணொளியாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

பொதுத்தேர்வில் தன் மகன் நல்ல மதிப்பெண்களை எடுத்து வெற்றிபெற்றிருந்ததால் ஐபோனை அவனுக்குப் பரிசளித்ததாகக் கூறுகிறார்.

மேலும், தனக்காக ரூ.85 ஆயிரம் மதிப்பில் ஐபோன் ஒன்றையும் தன் மகனுக்காக ரூ.1.50 லட்சம் மதிப்பில் அண்மையில் வெளிவந்த ‘ஐபோன் 16’ ரக ஐபோன் ஒன்றையும் வாங்கியதாக பெருமையாகக் கூறுகிறார்.

இந்தக் காணொளி அதிகமானோரால் பகிரப்பட்டு வரும் நிலையில், சமூக ஊடகங்களில் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

“பெற்றோரின் பாசம் இதுதான்,” என்று ஒருவரும் “ஐபோன் என்பது கௌரவச் சின்னமாக உள்ளது. ஆனால், இந்த மனிதருக்கு அது பாசமாகவும் பெருமையாகவும் உள்ளது,” என்று இன்னொருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

“இந்த ஆண்டின் சிறந்த தந்தை,” என்றும் “தந்தையின் பாசத்தை இந்தக் காணொளி எடுத்துக்காட்டுகிறது,” என்றும் பலரும் பலவாறு பாராட்டி சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்