சைதாப்பேட்டைச் சிறையில் கைதிகளிடையே சண்டை; நால்வர் காயம்

சைதாப்பேட்டைச் சிறையில் கைதிகளிடையே சண்டை; நால்வர் காயம்

படம்: தமிழ் இந்து திசை

11 Oct 2026 - 5:04 pm

1 mins read

சென்னை: சைதாப்பேட்டைச் சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்தனர்.

முன்னதாக, சென்னை புழல் மத்​தியச் சிறை​யில் இடப்​பற்​றாக்​குறை காரணமாக, அங்கு அடைக்​கப்​பட்​டிருந்த 23 கைதி​கள் கடந்த வாரம் சைதாப்​பேட்டைக் கிளைச் சிறைக்கு மாற்​றப்​பட்​டனர்.

ஆனால், கிளைச் சிறையில் தங்களுக்குப் போதுமான இடவசதி இல்லை எனக் கூறிய அந்தக் கைதிகள், தங்​களை மீண்டும் புழல் மத்​தியச் சிறைக்கே மாற்ற வேண்​டும் என்று சிறை நிர்​வாகத்​திடம் கோரிக்கை விடுத்​த​தாகக் கூறப்​படு​கிறது.

ஆனால், அதுதொடர்​பாகச் சிறை நிர்​வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரி​கிறது.

அதனால் ஆத்​திரமடைந்த கைதி​கள், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) காலை சைதாப்​பேட்டைக் கிளைச் சிறை​யில் சமையல் செய்து கொண்டிருந்த சில கைதி​களைத் தாக்​கிய​தாகக் கூறப்​படு​கிறது.

அப்போது கைதிகளிடையே மோதல் ஏற்​பட்​டது. ஒரு​வரையொரு​வர் சரமாரி​யாகத் தாக்​கிக் கொண்டதில் நால்வர் காயமடைந்​தனர். சிறைக் காவலர்​கள் விரைந்து சென்று இருதரப்​பினரை​யும் சமாதானப்​படுத்​தினர். காயமடைந்த 4 கைதி​களை​யும் சிகிச்​சைக்​காக அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

இதையடுத்​து, சிறைத்​துறை டிஐஜி பழனி சைதாப்​பேட்டைக் கிளைச் சிறைக்​குச் சென்​று விசா​ரணை நடத்​தி​னார். பின்​னர், புழல் மத்​தியச் சிறையி​லிருந்து மாற்​றப்​பட்ட 23 கைதி​கள், மோதலில் காயமடைந்த 4 கைதி​கள் என மொத்​தம் 27 பேரை​யும் புழல் மத்​தியச் சிறைக்கு மாற்ற அவர் உத்​தர​விட்​டார்.

குறிப்புச் சொற்கள்