தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாமதமான விமானம்; கிரிக்கெட் ரசிகர்கள் கோபம்

1 mins read
98989466-2502-40c8-9c05-09a2d1a9ae88
 ஸ்பைஸ்ஜெட் நிறுவன ஊழியர்களும் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. இதனால் ரசிகர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. - படம்: ஊடகம்

பெங்களூரு: ஐபிஎல் இறுதிப் போட்டியைக் காண, பெங்களூரில் இருந்து அகமதாபாத் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் செல்லவிருந்த கிரிக்கெட் ரசிகர்கள், அந்த விமானம் தாமதமானதால் கோபமடைந்தனர்.

இதனால் ஆர்சிபி அணி ரசிகர்களுக்கும் விமான நிலைய ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதின.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியைக் காண, பெங்களூரில் இருந்து ஏராளமான ரசிகர்கள் அங்கு செல்ல விமானத்தில் முன்பதிவு செய்திருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை விமான நிலையம் வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் தவிப்புக்கு ஆளாகினர்.

சில மணிநேரம் ஆகியும், விமானம் புறப்படாத நிலையில், அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், ஸ்பைஸ்ஜெட் நிறுவன ஊழியர்களும் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. இதனால் ரசிகர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

“18 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு அணி ஐபிஎல் கிண்ணத்தை வெல்லும் என்ற நம்பிக்கையில் விமானப் பயணத்துக்கு முன்பதிவு செய்திருந்தோம். ஆனால், வீண் தாமதம் காரணமாக சுமுகமாக அமைய வேண்டிய பயணம், சிக்கலாகிவிட்டது.

“எங்கே இறுதிப்போட்டியைக் காண முடியாமல் போய்விடுமோ என்று கவலையாக உள்ளது,” என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்