ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி

1 mins read
72a84a9b-949f-4c75-b753-567a90355a85
ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். - படம்: இந்திய ஊடகம்

ஈரோடு: கவிஞர் ஈரோடு தமிழன்பன் வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், ஈரோடு தமிழன்பன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், ஈரோடு தமிழன்பனின் தமிழ்த் தொண்டைப் போற்றும் வகையில் அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்