தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீகாரில் பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை நிதியுதவி

1 mins read
a3705358-6f0d-4371-8570-8f84f77e7e10
 ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்குச் சுயதொழில் தொடங்க முதல் தவணையாக ரூ.10,000 வழங்கப்படும் - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் பெண்கள் தொழில் தொடங்க நிதி உதவி வழங்கும், ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்குச் சுயதொழில் தொடங்க முதல் தவணையாக ரூ.10,000 வழங்கப்படும். வரும் செப்டம்பர் மாதம் முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளில் இந்தத் தொகை நேரடியாக வரவு வைக்கப்படும்.

ஆறு மாதத்துக்குப் பிறகு, ஒரு மதிப்பீடு நடத்தப்படும், அதன் பிறகு தேவைப்பட்டால் சிறப்பாகத் தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை கூடுதல் உதவி வழங்கப்படும். பெண்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்காக மாநிலம் முழுவதும், சந்தைகள் உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“இந்தத் திட்டம் பெண்களின் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், மாநிலத்தில் சிறந்த வேலை வாய்ப்புகளையும் வழங்கும். இனி, மக்கள் வேலைவாய்ப்புக்காக மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை என்றும் நான் நம்புகிறேன்,” என்று நிதிஷ் குமார் தமது எக்ஸ் தளப் பதிவில் கூறினார்.

பீகாரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்