லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் காருக்கு பெட்ரோல் போட வந்த சட்டமன்ற உறுப்பினரிடம் மணப்பெண் கிடைக்க உதவுமாறு பெட்ரோல் நிலைய ஊழியர் கேட்டுக்கொண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சரகாரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பிரிஷ்பூஷன் ராஜ்புத் தமக்கும் அந்த ஊழியருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலை தமது ஃபேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளார்.
“ஏன் என்னிடம் உதவி கேட்கிறாய்,” என்று எம்எல்ஏ கேட்டதும், “அண்மைய தேர்தல்களில் நான் உங்களுக்குத்தான் வாக்களித்தேன்,” என்று அகிலேந்திர கரே என்னும் 44 வயது ஆடவர் பதில் கூறினார்.
அதனைக் கேட்டு சிரித்த எம்எல்ஏ ராஜ்புத், “உனக்காகப் பிரார்த்தனை செய்கிறேன். மணப்பெண் கிடைக்க முயற்சி எடுக்கிறேன்,” என்று கூறி அந்த ஊழியரிடம் கைகுலுக்கிச் சென்றுவிட்டார்.

