ராகுலுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கை திசைதிருப்பும் செயல்: காங்கிரஸ்

1 mins read
7114f0dc-d190-4226-a9ae-aad95f3d45fd
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. - படம்: தி இந்து / இணையம்

புதுடெல்லி: திரு அம்பேத்கரின் சகாப்தத்தைத் தற்காத்த காரணத்துக்காக திரு காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது ஒரு ‘மரியாதைச் சின்னம்’ என்று காங்கிரஸ் தலைமைச் செயலாளர் கேசி வேணுகோபால் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.

மேலும், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளித்த புகாரையொட்டி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த டெல்லி காவல்துறை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பது திசைதிருப்பும் செயல் என்று காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 20) சாடியது.

பார்லிமண்ட் ஸ்திரீட் காவல் நிலையத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமங் ஜோ‌ஷி, திரு காந்தி மீது புகார் கொடுத்தார். அவருடன் அக்கட்சியின் அனுராக் தாக்கூர், பன்சரி ஸ்வராஜ் ஆகியோரும் இருந்தனர்.

குறிப்புச் சொற்கள்