தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆந்திராவில் முதல்முறையாக நீர்வழி விமானச் சேவை

1 mins read
135d840d-8458-4a74-8fbc-47355fcd4b2e
விஜயவாடாவில் வெள்ளிக்கிழமை புன்னமி காட் அருகே கிருஷ்ணா நதியில் கடல் விமானம் தரையிறங்கியது. - புகைப்பட உதவி: த இந்து (கே.வி.எஸ்.கிரி)

திருமலை: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்முறையாக நீர்வழி விமானச் சேவையைப் புன்னமிகாட்டில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையில் இருந்து ஸ்ரீசைலம் செல்லும் முதல் கடல் விமானம் சனிக்கிழமை (நவம்பர் 9) ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோருடன் புறப்பட்டது.

மீண்டும் இருவரும் அதே விமானத்தில் விஜயவாடா வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரே விமானத்தின் மூலம் நீரிலும் ஆகாயத்திலும் பறக்கும் புது அனுபவத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கும் வகையில் இந்த விமானச் சேவை இயக்கப்பட உள்ளது.

இதற்காக நிபுணர்கள் வழிகாட்டுதலின்படி விஜயவாடாவின் கிருஷ்ணா நதிக் கரையில் இருந்து சோதனை ஓட்டம் முன்கூட்டியே வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்திப் பார்க்கப்பட்டது.

இதனைத் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), காவல்துறை, சுற்றுலாத் துறை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட அதிகாரிகள் குழு மேற்பார்வையிட்டது.

முதல்வர் வருகையையொட்டி, பிரகாசம், ஸ்ரீசைலம் நீர்த்தேக்கங்களைச் சுற்றி காவலர்களின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்