தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானத்தில் 'பீடி' புகைத்த ஆடவர்; தரையிறங்கியதும் கைது

1 mins read
bb85f12b-906d-40af-ad29-02e88ff71191
கோப்புப்படம் -

இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணி ஒருவர் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த போது பீடியை பற்றவைத்து புகைத்துள்ளார்.

சம்பவம் அகமதாபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற அக்காசா விமானத்தில் நடந்தது.

விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியதும் ஆடவர் கைது செய்யப்பட்டர்.

கைது செய்யப்பட்ட ஆடவரின் பெயர் பிரவீன் குமார். அவருக்கு 56 வயது. பிரவீன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி, அவர் முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்ததாக அதிகாரிகள் கூறினர்.

விமானத்தில் புகைக்கக்கூடாது என்பது தமக்கு தெரியாது, ரயிலில் உள்ள கழிவறைகளில் புகைப்பது போல் விமானத்தில் செய்துவிட்டதாக பிரவீன் கூறினார்.

சகபயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் பெங்களூரு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெங்களூரு விமான நிலையத்தில் பீடி புகைத்ததற்காக கைது செய்யப்பட்ட முதல் நபரும் இவரே.

விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகளை மீறி எப்படி ஆடவர் பீடி மற்றும் தீக்குச்சிகளை விமானத்திற்குள் கொண்டு வந்தார் என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்