புதுடெல்லி: இந்திய ஆயுதப் படையின் மருத்துவச் சேவைப் பிரிவின் தலைமை இயக்குநராக அறுவை சிகிச்சை நிபுணரான துணை அட்மிரல் ஆர்த்தி சரின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பிரிவுக்குப் பெண் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல்முறை.
ஆயுதப் படையின் ஒட்டுமொத்த மருத்துவக் கொள்கைகள் தொடர்பான விவகாரங்களுக்கு சரின் பொறுப்பு வகிப்பார்.
சரின், 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ஆயுதப் படையில் இணைந்தார்.
இந்திய ஆயுதப் படையில் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாகச் சேவையாற்றி வரும் சரின் இந்திய ராணுவ மருத்துவமனையின் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சைப் பிரிவின் தலைவராகவும் இருந்தவர்.
பெண்களுக்காகப் பாதுகாப்பான வேலைச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க தேசிய பணிக்குழு ஒன்றை இந்திய உச்சநீதிமன்றம் அமைத்தது.
அந்தப் பணிக்குழுவின் உறுப்பினராக சரின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஆயுதப் படையில் சேர விரும்பும் பெண்களுக்கு சரின் முன்மாதிரியாக இருப்பதாக இந்தியத் தற்காப்பு அமைச்சு புகழாரம் சூட்டியது.