ஏப்ரலில் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இந்திய மாலுமி உட்பட ஐவர் சுட்டுக்கொலை

ஏப்ரலில் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இந்திய மாலுமி உட்பட ஐவர் சுட்டுக்கொலை

கோப்புப் படம்: ஏஎஃப்பி

01 Oct 2026 - 3:58 pm

1 mins read

மொகடிஷு: சோமாலியக் கடற்​பகு​தி​யில் கடத்​தப்​பட்ட கப்​பலில் இருந்த இந்திய மாலுமி ஒருவர் உட்பட ஐந்து கப்​பல் ஊழியர்​களை சோமாலியக் கடற்கொள்ளையர்கள் சுட்டுக்கொன்​றனர்.

ஆப்​பிரிக்க நாடான சோமாலி​யா​வின் தன்​னாட்சிபெற்ற மண்டலமான புண்ட்​லாண்ட் பகு​தி​யின் கடலோரக் காவற்படை வெளி​யிட்​ட அறிக்​கை​யில், கடந்த ஏப்ரலில் சோமாலி​யத் தலைநகர் மொக​டிஷுவை நோக்​கிச் சென்றுகொண்​டிருந்த `எம்டி ஹானர் 25’ என்ற எண்​ணெய் சுத்திகரிப்புக் கப்​பலை கடற்​கொள்​ளை​யர்​கள் கடத்​தியதாகத் தெரிவித்தது. அக்கப்பலில் 18,500 பீப்​பாய் எரிபொருளுடன் 17 ஊழியர்​கள் இருந்​தனர்.

இந்​நிலை​யில், தரின்-​பார் பகு​தி​யில் சுற்றுக்காவல் படை​யினர் நடத்திய மீட்பு நடவடிக்கையின்போது, கப்​பலை கடத்​திய கடற்கொள்​ளை​யர்​கள் சரணடைய முன்​வந்​தனர்.

இருப்பினும், அவர்​கள் கப்​பலில் இருந்த ஐந்து ஊழியர்​களை ஏற்கெனவே சுட்டுக்கொன்றுவிட்டது தெரியவந்தது. அவர்களில் ஓர் இந்​தி​யர், மூன்று பாகிஸ்​தானியர்​கள், மியான்​மாரைச் சேர்ந்த ஒரு​வர் அடங்கு​வர். எஞ்​சிய 12 பேரில் 10 பேர் பாகிஸ்​தானைச் சேர்ந்தவர்கள்.

`எம்டி ஹானர் 25’ கப்​பல், பாது​காப்​புப் படை​யினரின் முழுக் கட்டுப்பாட்​டுக்​குள் இப்​போது கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது. இந்தச் சம்பவம் தொடர்​பாக 16 கொள்​ளை​யர்​கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய எஞ்​சிய கொள்​ளை​யர்​களைத் தேடும் பணி நடை​பெற்று வரு​கிறது.

டோகோ நாட்டுக் கொடி​யுடன் செங்​கடலில் பயணம் செய்த ‘எம்டி யூரேகா’ என்ற மற்​றொரு எரிபொருள் கப்​பலை​யும் அதிலிருந்த 12 ஊழியர்​களை​யும் சோமாலியக் கொள்​ளை​யர்​கள் கடந்த செவ்​வாய்க்​கிழமை (செப்டம்பர் 29) விடு​வித்​தனர். மீட்கப்​பட்ட 12 பேரான எட்டு எகிப்​தி​யர்​களும் நான்கு இந்​தி​யர்​களும் இப்​போது உள்​ளூர் மக்​களின் பராமரிப்​பில் பாது​காப்​பாக உள்​ள​தாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கடற்கொள்ளைகப்பல்இந்தியர்