பெங்களூரு: மாநிலத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் சட்ட மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2025 டிசம்பர் மாதம் கர்நாடகத்தின் ஹுப்பலியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டதற்காக, மான்யா பாட்டீல் என்பவரை அவரது குடும்பத்தினரே கொலை செய்தனர்.
அச்சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை பிரகாஷ் பாட்டீலும் அவரது இரு மகன்களும் கைது செய்யப்பட்டனர்.
கா்நாடகத்தை உலுக்கிய அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில அரசு தீவிரமாகச் செயல்பட்டது.
அந்த முயற்சிகளின் பலனாக, ‘இவ நம்மவா, இவ நம்மவா’ என்ற சட்ட மசோதாவை கர்நாடக அரசு தயாரித்தது.
அந்த சட்ட மசோதாவுக்கு தற்போது கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த மசோதாவின்படி, ஆணவக் கொலையில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.
12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூகச் சீர்திருத்தவாதி பசவேசுவரா எனப்படும் பசவண்ணா எழுதிய வசன இலக்கியத்தில், ‘இவன் மனிதன் அல்ல, இவன் மனிதன் அல்ல, இவன் நம்மவன், இவன் நம்மவன்’ என்று சாதி பேதங்களுக்கு எதிராகச் சமத்துவம் வலியுறுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதன் அடிப்படையில், ஆணவக் கொலைக்கு எதிரான சட்ட மசோதாவுக்கு ‘இவ நம்மவா, இவ நம்மவா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

