தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கழுகு மோதியதில் விமானத்தின் முன்பகுதி சேதம்

1 mins read
100b250e-5f86-4ec5-823c-7fa436518cc6
இந்தச் சம்பவத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது. - படம்: ஊடகம்

ராஞ்சி: நான்காயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் மீது கழுகு மோதியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜூன் 2ஆம் தேதி பாட்னாவில் இருந்து கோல்கத்தா நகரை நோக்கி, இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் 175 பயணியர் இருந்தனர்.

ஏறக்குறைய 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, அந்த விமானத்தின் மீது திடீரென ஒரு கழுகு மோதியது.

இதையடுத்து, விமானத்தின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டதால், தலைமை விமானி உடனடியாக அருகில் உள்ள ராஞ்சி விமான நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.

அனுமதி கிடைத்ததை அடுத்து, இண்டிகோ விமானம் ராஞ்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது.

விமானத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் அந்நிறுவனம் கூறியது.

ஏர்பஸ் A320 ரக விமானத்தில் கழுகு மோதியதால் விமானத்தில் பள்ளம் ஏற்பட்டதாக பிர்சா முண்டா விமான நிலைய இயக்குநர் ஆர்.ஆர். மவுரியா தெரிவித்தார்.

அனைத்துப் பயணிகளும் விமான ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர் உறுதிசெய்தார்.

குறிப்புச் சொற்கள்