தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடுவானில் தீ; கோழிக்கோடு செல்லவிருந்த விமானம் மீண்டும் அபுதாயில் தரையிறக்கம்

1 mins read
114ddd0b-1a9d-4b5f-b9a9-c51af09d4975
புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திரத்தில் தீப்பிடித்ததை விமானி கண்டுபிடித்தார். படம்: ஊடகம் -

கோழிக்கோடு: அபுதாபியில் இருந்து கோழிக்கோடு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இயந்திரங்களில் ஒன்றில் திடீரென தீப்பிடித்ததால் விமானம் மீண்டும் அபுதாபிக்குத் திருப்பிவிடப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திரத்தில் தீப்பிடித்தது கண்டறியப்பட்டதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

விமானம் 1,000 அடி உயரத்தில் பறந்தபோது இயந்திரத்தில் தீப்பிடித்ததைக் விமானி கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டது.

விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாகவும் பயணிகள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவ்விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர்.

முன்னதாக, கடந்த ஜனவரி 23ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து மஸ்கட் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட 45 நிமிடங்களிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது.