மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரின் (35), மகள்கள் ஆயிஷா (16) மற்றும் ஜைனப் (13) ஆகியோர் மாண்டனர்.
அவர்களின் இறப்புக்குக் காரணம் நச்சு உணவு என்று கூறப்படுகிறது.
சனிக்கிழமை இரவு அவர்கள் நால்வரும் உறவினர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உணவு உண்டனர். பிறகு அவர்கள் தர்பூசணி பழம் சாப்பிட்டனர்.
அன்று இரவு நேரத்திலே நால்வருக்கும் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சிகிச்சைப் பலனின்றி சில மணி நேரங்களிலேயே அவர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் சடலங்களை மருத்துவர்கள் ஆராய்ந்தனர். மருத்துவர்களின் அறிக்கையில் உணவு நச்சு காரணமாக நால்வருக்கும் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், நவிமும்பை வேளாண் உற்பத்தி சந்தையில் தர்பூசணிக்கான தேவை திடீரெனச் சரிந்துள்ளது.
ஒரு கிலோ தர்பூசணி ரூ.5 முதல் ரூ.7 வரை மட்டுமே விற்கப்படுவதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.
பொதுவாக, தர்பூசணியின் மொத்த விற்பனை விலை ரூ.10 முதல் ரூ.35 ஆகவும், சில்லறை விற்பனை விலை ரூ.30 முதல் ரூ.100 வரையிலும் இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
தர்பூசணி சாப்பிட்ட பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததால் அதை வாங்குவதை பொதுமக்கள் தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது.

