காஷ்மீர் தேர்தலைப் பார்வையிடும் வெளிநாட்டுக் குழு

காஷ்மீர் தேர்தலைப் பார்வையிடும் வெளிநாட்டுக் குழு

படம்: இந்திய ஊடகம்

25 Sep 2024 - 6:05 pm

1 mins read

புதுடெல்லி: காஷ்மீர் தேர்தலைப் பார்வையிடுவதற்காக வெளிநாட்டுத் தூதர்கள் குழு புதன்கிழமை அன்று காஷ்மீர் வந்து சேர்ந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய சங்கம், ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட தூதர்கள் ஸ்ரீநகர் வந்தனர்.

இருபது உறுப்பினர் அடங்கிய குழுவில் இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் இடம்பெற்று உள்ளனர்.

மத்திய அரசு இதற்கு அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதைக் காட்டுவது மத்திய அரசின் நோக்கமாகும்.

குறிப்புச் சொற்கள்
காஷ்மீர்அமெரிக்காமத்திய அரசு