சென்னை: தமிழகத்தில் பொங்கல் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஏராளமானோர் காலை வீட்டில் பொங்கலிட்ட கையோடு, கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர்.
புதுவை ஆரோவில் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துகொண்டு பொங்கலிட்டும் கும்மியடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மல்லர் கம்பம் கயிறு ஏறுதல், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகிய போட்டிகளைக் கண்டு ரசித்தனர்.