மலையைக் குடைந்து அரண்மனை கட்டிய ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்

1 mins read
52a4beee-77ac-4fcf-b435-cbb64f75a1f3
விசாகப்பட்டினத்தில் இருக்கும் ருஷிகொண்டா மலையில் கட்டப்பட்டிருக்கும் அம்மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அரண்மனை. - படம்: இந்திய ஊடகம்

அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் ருஷிகொண்டா மலையின் பெரும்பகுதியைக் குடைந்து அம்மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி ரூபாய் மதிப்பில் அரண்மனை கட்டியுள்ளார்.

இந்த அரண்மனை தற்போது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகனின் அந்த அரண்மனையைப் பூட்டி முத்திரை வைப்பதா அல்லது அல்லது அதனை ஆந்திர அரசுக்குச் சொந்தமாக்குவதா என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு குழப்பத்தில் உள்ளது.

வெளிப்புற கட்டமைப்பு பிரம்மிப்யூட்டும் அளவுக்கு இருப்பதாகவும் இந்த அரண்மனையின் உள்கட்டமைப்பு தங்கத்தால் இழைத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் ருஷிகொண்டா மலையைக் குடைந்து 10 ஏக்கர் பரப்பளவில் நான்கு பகுதிகளைக் கொண்ட கட்டடங்களாகக் கட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த அரண்மனையின் கட்டமைப்புகளைப் பார்க்கும்போது, இது முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் முதல்வர் அலுவலக அதிகாரபூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி இக்கட்டடம் கட்டப்பட்டிருப்பதால், பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த அரண்மனையிலிருந்து பார்த்தால் கடற்கரை தெரிகிறது. சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி என அனைத்தும் எவ்வாறு இதற்குள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்