மேற்கு வங்க முன்னாள் துணைச் சபாநாயகர் உயிரை மாய்த்துக்கொண்டார்

மேற்கு வங்க முன்னாள் துணைச் சபாநாயகர் உயிரை மாய்த்துக்கொண்டார்

2 mins read
ஊழலில் ஈடுபடவில்லை எனக் கடிதம் எழுதிவைத்திருப்பதாகத் தகவல்
33a24f13-aedc-447e-bab7-045048acaea3
மேற்கு வங்க சட்​டமன்றத்தின் முன்​னாள் துணைச் சபா​நாயகர் ஆஷிஷ் பானர்ஜி, 74. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

கோல்கத்தா: மேற்கு வங்க சட்​டமன்றத்தின் முன்​னாள் துணைச் சபா​நாயகர் ஆஷிஷ் பானர்ஜி, 74, தூக்​கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம் அரசி​யலில் ஈடுபட்டது தவறு என்​றும் ஊழல் ஏதும் செய்​ய​வில்லை என்றும் அவர் எழு​திய குறிப்பு கிடைத்​திருப்​ப​தால் சர்ச்சை ஏற்பட்டுள்​ளதாகக் கூறப்படுகிறது.

மேற்கு வங்​கத்​தின் ராம்​புர்​ஹட் சட்​டமன்றத் தொகு​தி​யில் 2001 முதல் 2026 வரை தொடர்ந்து ஐந்து முறை திரிணா​மூல் காங்கிரஸ் சார்பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர் திரு ஆஷிஷ் பானர்ஜி. திருவாட்டி மம்தா பானர்ஜி தலை​மையி​லான அரசில் அமைச்சராக​வும் சட்டமன்றத் துணைச் சபா​நாயக​ராக​வும் அவர் பதவி வகித்​தார்.

பிர்​பூம் நகரில் தமது வீட்​டுக்கு அரு​கில் உள்ள திரிணா​மூல் கட்​சி​யின் அலு​வல​கத்​தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை​யில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக அவர் கண்​டெடுக்​கப்​பட்​டார். அப்​போது காவல்துறை​யினர் அவர் எழு​தி​ய​தாக நம்​பப்​படும் கையெழுத்​துப் பிர​தியை அங்​கிருந்து கைப்​பற்​றினர்.

அந்த ஒரு பக்கக் கடிதம் வங்க மொழி​யில் எழுதப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படுகிறது. அதில், “எனது மரணத்​துக்கு யாரும் பொறுப்பில்லை. நான் எப்​போதுமே ஊழலில் ஈடு​பட்​ட​தில்​லை. எந்​தவொரு வேலைக்​காக​வும் யாரிட​மும் பணம் வாங்​கியது இல்​லை. திரிணா​மூல் கட்​சிக்​குள் நடந்த சில தவறுகளை என்​னால் ஏற்​றுக்​கொள்ள முடிய​வில்லை. ஆனாலும் அவற்​றுக்கு எதி​ராக என்​னால் குரல் கொடுக்க முடிய​வில்​லை,” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், “தாராபித்​-​ராம்​புர்​ஹட் மேம்​பாட்டு ஆணை​யத்​தின் ஒப்பந்தப்புள்ளி தொடர்​பான முடிவு​கள், காசோலை வழங்​குதல், திட்ட ஒப்​புதல்​கள் அல்​லது தடை​யில்லாச் சான்​றிதழ் வழங்​கிய​தில் எனக்கு எந்​தப் பங்​கும் இல்​லை. என்னைக் களங்​கப்​படுத்த எடுக்​கப்​பட்ட செயல்களைக் கண்​டிக்​கிறேன். நான் அரசி​யலுக்கு வந்​தது தவறு என்று உணர்​கிறேன். வருங்​காலத்​தில் என் குடும்பத்தைச் சேர்ந்த இளையர்​கள் அரசி​யலில் ஈடுபட வேண்டாம்,” என்று அக்கடிதத்தில் கூறப்​பட்​டுள்​ளது.

இவ்வேளையில், திரு ஆஷிஷ் பானர்ஜி பொதுச்​சேவைக்​காகத் தம் வாழ்​நாளை அர்ப்​பணித்​தவர் என்​று கூறிய திரிணா​மூல் கட்​சித் தலைவர் மம்தா பானர்ஜி, திரு ஆஷிஷ்மீது பொய்​யான குற்​றச்​சாட்​டு​களைச் சுமத்​தி, சில நாள்​களாக அவர் துன்​புறுத்​தப்​பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மேற்கு வங்கம்சபாநாயகர்சட்டமன்றம்உயிரிழப்புகண்டனம்மம்தா பானர்ஜிஊழல்