முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்

1 mins read
dd171a85-05c0-4b71-b6b4-74f84b35023d
2004 - 2005 ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார் நட்வர் சிங். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே நட்வர் சிங் சனிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 93.

வயது மூப்பு காரணமாக நீண்ட நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த திரு நட்வர் சிங், டெல்லி அருகே குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

கடந்த சில நாட்களாக அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இரவில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது இறுதிச்சடங்கு டெல்லியில் நடைபெறும் என்று இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

2004 - 2005 ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார் நட்வர் சிங். பாகிஸ்தானுக்கான இந்திய தூதராகவும் 1966 -1971ஆம் ஆண்டு வரை அவர் பதவி வகித்தார்.

குறிப்புச் சொற்கள்