சண்டிகார்: பாஜகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், ஹரியானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் செய்தியாளர் ஒருவரிடம் கண்ணீர்விட்டு அழும் காட்சி காணொளியாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பாஜக வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஷசி ரஞ்சன் பர்மர செய்தியாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியில் கண்ணீர்விட்டு அழுததாகக் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பரவும் அந்தக் காணொளியில், ரஞ்சன் பர்மாவிடம் செய்தியாளர் ஒருவர் பேட்டி எடுக்கிறார். அப்போது, பாஜக வேட்பாளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறாதது ஏன் எனக் கேட்கிறார். அதற்கு, ரஞ்சன், “நான் பிவானி அல்லது டோஷம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தேன். என்னுடைய பெயர் பட்டியலில் இடம்பெறும் என ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் என் பெயர் இல்லை,” எனக் கூறிவிட்டு தேம்பித் தேம்பி அழும் காட்சியைக் காணமுடிகிறது.