தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் சுக்பீர் சிங் பாதல்மீது துப்பாக்கிச்சூடு

1 mins read
599af9e4-e257-4d08-96a8-ee6ff920b1d6
பஞ்சாப் முன்னாள் முதல்வர்மீது துப்பாக்கியால் சுட முயன்றவரை அருகில் இருந்தவர்கள் தடுத்துநிறுத்தும் காட்சி. - படம்: ஏஎன்ஐ

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் சிரோன்மணி அகாலி தளம் தலைவரும் பஞ்சாப்பின் முன்னாள் முதல்வருமான சுக்பீர் சிங் பாதல்மீது புதன்கிழமை (டிசம்பர் 4) காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்தக் கொலை முயற்சியில் இருந்து சுக்பீர் சிங் நூலிழையில் உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரைச் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தாக்கினர். தாக்குதலுக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நாராயண் சிங் சௌரா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

2015ஆம் ஆண்டு தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக அகல் தக்த், பஞ்சாப் முன்னாள் முதல்வர் சுக்பீர் சிங் பாதலுக்குத் தண்டனை விதித்தது.

சீக்கியர்களின் குருத்வாராக்களின் சமையலறைகளிலும் கழிவறைகளிலும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள அவருக்கு உத்தரவிடப்பட்டது.

தனது தவறுகளை அவர் ஒப்புக்கொண்டதாகவும் அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 3ஆம் தேதி பொற்கோவிலுக்கு சுக்பீர் சிங் பாதல் வந்தார்.

கழுத்தில் தகடு அணிந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது தண்டனையை அவர் நிறைவேற்ற தொடங்கியபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

சிறு சலசலப்புக்குப் பிறகு தனது தண்டனையை மீண்டும் நிறைவேற்ற தொடங்கினார் சுக்பீர் சிங் பாதல்.

குறிப்புச் சொற்கள்