அமெரிக்காவில் காணாமல்போன நான்கு இந்தியர்கள் சடலமாக மீட்பு

1 mins read
21626e91-4e7a-4eb0-b844-8e9b5b58d6a1
இந்த நால்வரும் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினர். - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் காணா​மல் போன ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த நான்கு இந்​தி​யர்​கள் சடல​மாக மீட்​கப்​பட்டுள்ளனர்.

கார் விபத்​தில் சிக்கி அவர்கள் உயி​ரிழந்​தது தெரிய​வந்​துள்​ளது.

இந்​தி​யர்​களான கிஷோர் திவன், 89, ஆஷா திவன், 85, ஷைலேஷ் திவன், 86, கீதா திவன், 84 ஆகிய நான்கு பேரும் அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் வசித்து வந்​தனர்.

கடந்த வாரம் மேற்கு வெர்​ஜினி​யா​வின் மார்​ஷல் மாவட்​டத்​தில் உள்ள பிரபுப​டாஸ் பேலஸ் ஆஃப் கோல்டு என்ற புகழ்பெற்ற கோயிலுக்கு அவர்கள் காரில் சென்றனர்.

இந்​நிலை​யில், ஜூலை 31ஆம் தேதி முதல் அவர்​களைத் தொடர்​பு​கொள்ள முடிய​வில்லை என குடும்​பத்​தினர் காவல்துறை​யில் புகார் செய்​துள்​ளனர்.

ஓஹியோ மாவட்ட காவல்துறை விசா​ரணை நடத்​தியதில் பிக் வீலிங் கிரீக் சாலை​யில் அவர்​கள் சென்ற கார் விபத்​தில் சிக்கி இருந்​தது தெரிய வந்தது.

ஆகஸ்ட் 2ஆம் தேதி சனிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் விபத்து நடந்துள்ளது.

அங்​கிருந்து அந்த நால்வரின் உடல்​களும் மீட்​கப்​பட்​டன.

கடைசியாக அந்தக் குடும்பத்தினர் பென்சில்வேனியாவில் உள்ள பர்கர் கிங் கடைக்குச் சென்றுள்ளனர். கண்காணிப்புக் கேமராவில் நால்வரில் இருவர் உணவகத்தில் நுழைவது பதிவாகி இருந்தது. கடன் அட்டையும் அங்குதான் கடைசியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது வாகனம் பிட்ஸ்பர்க் நோக்கி இண்டர்ஸ்டேட் 79ல் சென்றதை கேமராக்கள் காட்டின.

இதையடுத்து காவல்துறை அவர்கள் சென்ற வழியில் கார் விபத்துக்குள்ளானதைக் கண்டுபிடித்தனர்.

சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்