தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பதி மலைப்பாதையில் பிடிபட்ட சிறுத்தை; 2 மாதங்களில் நான்காவது சம்பவம்

1 mins read
0e522e4e-22f9-42be-8b08-df4b8f0005ea
திருப்பதி மலைக்கோயிலுக்கு இட்டுச் செல்லும் அலிப்பிரி நடைபாதையில் வனத்துறையினர் அமைத்திருந்த பொறியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது. - படம்: ஐஏஎன்எஸ்

திருப்பதி: திருப்பதி மலைக்கோயிலுக்கு இட்டுச் செல்லும் அலிப்பிரி நடைபாதையில் வனத்துறையினர் அமைத்திருந்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு அது பிடிபட்டதாகக் கூறப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் பிடிபட்ட நான்காவது சிறுத்தை இது.

கடந்த ஒரு வாரமாக இச்சிறுத்தையைப் பிடிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.

ஒவ்வொரு நாளும் சிறுத்தை கூண்டிற்கு அருகே நெருங்கி வந்தாலும் அதனுள் செல்லவில்லை என்பது கண்காணிப்பு கேமராப் பதிவுகளில் தெரியவந்தது. ஒருவழியாக ஞாயிற்றுக்கிழமை இரவு அது பிடிபட்டது.

திருப்பதியில் உள்ள வனவிலங்குப் பூங்காவிற்கு சிறுத்தை அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்