மோசடி, லஞ்சப் புகார்கள்: அதானி மீதான அமெரிக்காவின் சட்டப்பிடி தளர்கிறது

மோசடி, லஞ்சப் புகார்கள்: அதானி மீதான அமெரிக்காவின் சட்டப்பிடி தளர்கிறது

1 mins read
f9fec8d8-3585-4414-a837-c5d84d4aedf3
கௌதம் அதானி. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவருமான கௌதம் அதானி, லஞ்சம் மற்றும் மோசடி தொடர்பாக அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாகச் சந்தித்து வந்த சட்டப் போராட்டம் ஒரு முடிவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

‘அதானி கிரீன் எனெர்ஜி’ என்னும் தமது நிறுவனம் பற்றி பொய்யான, தவறான தகவல்களைக் கொடுத்ததாக அமெரிக்காவின் பங்குச்சந்தை பரிவர்த்தனை ஆணையம் (எஸ்இசி) தொடுத்திருந்த வழக்கை முடித்து வைக்க திரு அதானியும் அவரது உறவினர் சாகரும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்காக அவர்கள் US$18 மில்லியன் (S$23 மில்லியன்) செலுத்தவும் ஒப்புக்கொண்டதாக வியாழக்கிழமை (மே 14) அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஓர் உடன்பாட்டு ஆவணம் தெரிவித்தது.

இந்தியாவில் ஆகப் பெரிய சூரிய மின்சக்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஏலக்குத்தகையை அதானி கிரீன் எனெர்ஜி நிறுவனத்திற்குப் பெற்றுத்தர இந்திய அதிகாரிகளுக்கு பலநூறு மில்லியன் டாலர்களை லஞ்சமாகத் தரவோ அல்லது லஞ்சம் தருவதாக உறுதியளிக்கவோ திரு அதானி முன்னின்று செயல்பட்டதாக கடந்த 2024 நவம்பர் மாதம் எஸ்இசி வழக்குத் தொடுத்திருந்தது.

இந்நிலையில், இதேபோன்றதொரு மோசடிக் குற்றச்சாட்டிலிருந்து அதானியை விடுவிக்க அமெரிக்க நீதித்துறை முயன்று வருவதாக புளூம்பெர்க் செய்தி குறிப்பிட்டிருந்தது.

அமெரிக்காவின் சட்டப் பிடியிலிருந்து அதானி விடுவிக்கப்படும் செய்தி வெளியானதும் வெள்ளிக்கிழமை இந்தியப் பங்குச்சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 3.3 விழுக்காடு ஏற்றம் கண்டன.

குறிப்புச் சொற்கள்