பொங்கலுக்கு முன் இலவச வேட்டி, சேலைகள் கிடைக்கும்

1 mins read
4f2dd5aa-a464-4c07-8dbf-4d05857adb66
பொங்கலுக்கு முன்பே இலவச வேட்டி, சேலைகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: தினமலர்

காஞ்சிபுரம்: பொங்கலுக்கு முன்பாகவே வேட்டி, சேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

காஞ்சிபுரத்தில் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, “சில ஆண்டுகளுக்கு முன், பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலையை யாரும் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சியில் வழங்கப்படும் வேட்டி, சேலைகளை அனைவரும் பயன்படுத்துகின்றனர். நல்ல தரமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

வரும் பொங்கல் பண்டிகைக்கு முன், அனைவருக்கும் வேட்டி, சேலை விநியோகம் செய்யும் பணி முடிக்கப்படும். அரசு வெளியிடும் அதிகாரபூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் விநியோகம் தொடங்கப்படும்.

அந்த அதிகாரபூர்வ அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்