பாகிஸ்தான் வான்வெளித் தடை மேலும் நீட்டிப்பு

பாகிஸ்தான் வான்வெளித் தடை மேலும் நீட்டிப்பு

கோப்புப் படம்: நியூஸ் பைட்ஸ்

18 Oct 2026 - 8:57 pm

1 mins read

புதுடெல்லி: இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் நாட்டு வான்வெளியைப் பயன்படுத்த விதித்த தடையை பாகிஸ்தான் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்தது.

இதையடுத்து எதிவரும் நவம்பர் 24ஆம் தேதி வரை இந்தத் தடை நீடிக்கும். பாகிஸ்தானின் இந்த திடீர் அறிவிப்பால் அனைத்துலக விமானப் போக்குவரத்து பெரும் சவாலைச் சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து, இரு தரப்பும் பரஸ்பரம் வான்வெளித் தடைகளை விதித்தன. இக்கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் சூழலில், தற்போதைய நீட்டிப்பு விமான நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

தடை காரணமாக டெல்லி, மும்பை போன்ற நகரங்களிலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் அரபிக்கடல் வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

இதனால் பயண நேரம் ஏறக்குறைய ஒரு மணி 1 முதல் மூன்று மணி நேரம்வரை அதிகரிப்பதுடன், அதிகப்படியான எரிபொருள் செலவால் பயணக் கட்டணங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
பாகிஸ்தான்வான்வெளிவிமானப் போக்குவரத்துஎரிபொருள்