அதிருப்தியாளர்களால் மம்தாவுக்கு மேலும் நெருக்கடி

அதிருப்தியாளர்களால் மம்தாவுக்கு மேலும் நெருக்கடி

1 mins read
7d9d0339-a2bc-430c-b9fb-d1423a999023
சொந்தக் கட்சியிலிருந்தே மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. - படம்: பிரிட்டானிகா

கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ரிதபிரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிதியான ரூ.675 கோடி குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதால் கட்சிக்குள் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.

கட்சிக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினையை சபாநாயகர்வரை கொண்டு சென்றதாகக் கூறி அதிருப்தி எம்எல்ஏ ரிதபிரதா பானர்ஜி உள்ளிட்டோர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதையடுத்து, ரிதபிரதா பானர்ஜி தலைமையில் அணிவகுத்த 60 எம்எல்ஏக்கள் அவரை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். மாநிலங்களவை எம்பிக்கள் 28 பேரில் 20 பேர் தேசியவாத இந்தியக் குடிமக்கள் கட்சியில் இணைந்தனர். இதனால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது கட்சியின் நிதி தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. கட்சிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, ரூ.675 கோடி மதிப்பிலான திரிணாமூல் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் நிதியின் ஆதாரம் குறித்து விசாரணை நடத்தவும் அதிருப்திக் குழுவினர், முன்னாள் பொருளாளர் கோரியுள்ளனர். இதனால் மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்த நிதிகள் சட்டவிரோதமான வழிகளில் பெறப்பட்டிருக்கலாம் என அதிருப்தி எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன் அடிப்படையில் நிதியின் ஆதாரம் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்த காவல்துறையிடம் அதிருப்தியாளர்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் கட்சிக்குள் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. இதற்கிடையே, மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக், கட்சியில் உள்ள அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்