தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ககன்யான் திட்டம்: முதல் ஒருங்கிணைந்த சோதனையில் இஸ்‌ரோவுக்கு வெற்றி

1 mins read
0fecdda2-333a-4dd6-a38c-6e381e66767b
விண்வெளியிலிருந்து மனிதர்களைச் சுமந்துவரும் விண்வெளி ஓடத்தை கடலிலிருந்து மீட்டெடுக்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. - படம்: இஸ்ரோ/எக்ஸ்
multi-img1 of 2

புதுடெல்லி: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பணிகளை இந்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்துக்கான முதல் ஒருங்கிணைந்த சோதனையை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வெளியிட்ட அறிக்கையில், விண்வெளியில் இருந்து மனிதர்களை சுமந்து வரும் விண்வெளி ஓடத்தை கடலில் இருந்து மீட்டெடுக்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரோ, இந்திய விமானப்படை, கடற்படை என பலத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில், இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும் இஸ்‌ரோ கூறியுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த செயல்பாடு, விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்டது. இது ககன்யான் திட்டத்தின் ஒரு முக்கியமான மைல்கல் என துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ககன்யான் திட்டத்துக்காக சுபன்ஷு சுக்லா, குரூப் கேப்டன் பிரசாந்த் பி நாயர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு பயற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்