இந்தியாவின் அசாம் மாநில நிர்வாகம், குடிப்பழக்கம் உள்ள, உடற்பருமன்மிக்க காவல்துறை அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கிறது.
காவல்துறையில் பருமனாக இருப்போருக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
பணிபுரிவதற்குத் தகுதியற்ற 650 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என அசாம் காவல்துறைத் தலைவர் ஜி.பி.சிங் கூறினார்.
உடற்தகுதிபெற காவல்துறை அதிகாரிகளுக்கு மூன்று மாத அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகு, அவர்களின் 'பிஎம்ஐ' குறியீடு பதிவுசெய்யப்படும், தகுதி இல்லாதவர்கள் விருப்ப ஓய்வில் வீட்டுக்கு அனுப்பப்படுவர். இதே கதிதான் குடிகார அதிகாரிகளுக்கும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.