கடலுக்கடியில் பிரம்மாண்ட தேசியக்கொடி: 220 பேரின் புதிய கின்னஸ் சாதனை

கடலுக்கடியில் பிரம்மாண்ட தேசியக்கொடி: 220 பேரின் புதிய கின்னஸ் சாதனை

2 mins read
a4f7c69c-5193-498d-b474-68ca411997ad
அந்தமான் - நிகோபார் தீவுகளின் கடற்பகுதியில் நீருக்கடியில்  220 பேரின் முயற்சியால் உலகின் மிகப்பெரிய மூவர்ண தேசியக் கொடியை விரித்து, புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. - படம்: தினமணி

அந்தமான்: அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் கடற்பகுதியில் நீருக்கடியில் உலகின் மிகப்பெரிய தேசியக் கொடியை விரித்து, புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அந்தமான் தீவுகளின் சுற்றுலாச் சிறப்பையும் கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவின் வலிமையையும் உலக அரங்கிற்குப் பறைசாற்றும் நோக்கில், புகழ்பெற்ற ஸ்வராஜ் தீவிலுள்ள ராதாநகர் கடற்கரையை ஒட்டிய ஆழ்கடல் பகுதியில் இந்த மகத்தான சாதனை முயற்சி அரங்கேற்றப்பட்டது.

அந்தமான் - நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் ஜோஷி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இந்தியக் கடற்படை, கடலோரக் காவற்படை, வனத்துறை அதிகாரிகள், ஆழ்கடல் முக்குளிப்புப் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் என 220க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

220 பேர் ஒன்றிணைந்து நீருக்கடியில் 197 அடி நீளமும் 131 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான மூவர்ண தேசியக் கொடியை விரித்து அசத்தியதற்கான சான்றிதழ் அந்தமான் - நிகோபார் நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது. 
220 பேர் ஒன்றிணைந்து நீருக்கடியில் 197 அடி நீளமும் 131 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான மூவர்ண தேசியக் கொடியை விரித்து அசத்தியதற்கான சான்றிதழ் அந்தமான் - நிகோபார் நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது.  - படம்: தினமணி

நீருக்கடியில் 197 அடி நீளமும் 131 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான இந்திய தேசியக் கொடியை விரித்து அசத்தினர்.

இந்த அசாத்தியமான சாதனையை ஆய்வு செய்த கின்னஸ் உலகச் சாதனை அமைப்பின் நடுவர் ரிஷிநாத், இதற்கான அதிகாரபூர்வ சான்றிதழை அந்தமான் - நிகோபார் நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.

இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நீருக்கடியில் 197 அடி நீளமும் 131 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான இந்திய தேசியக் கொடியை விரித்து அசத்தினர்.

இந்த அசாத்தியமான சாதனையை ஆய்வு செய்த கின்னஸ் உலகச் சாதனை அமைப்பின் நடுவர் ரிஷிநாத், இதற்கான அதிகாரபூர்வ சான்றிதழை அந்தமான் - நிகோபார் நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.

கடலுக்கடியில் இந்திய மூவர்ணக் கொடி கம்பீரமாக விரிந்திருந்த இந்தக் காட்சி, காண்போரை வியப்பில் ஆழ்த்தியதுடன் தேசப்பற்றையும் மிளிரச் செய்தது.

குறிப்புச் சொற்கள்