சிறுமி ஒருத்தி கைப்பேசியை விழுங்கியதை அடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சைமூலம் அவள் வயிற்றிலிருந்து அக்கருவியை அகற்றினர்.
இச்சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது.
பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 15 வயதுச் சிறுமி, ஏதோ ஆத்திரத்தில் அந்தப் பழையபாணி கைப்பேசியை விழுங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, அவளின் குடும்பத்தினர் அவளை பிந்த் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவர்கள், அவளை குவாலியர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்படி அறிவுறுத்தினர்.
குவாலியரிலுள்ள ஜெய ஆரோக்கிய மருத்துவமனையில் அவள் சேர்க்கப்பட்டாள். அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவளது வயிற்றினுள் கைப்பேசி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
உடனடியாக அவளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சைக்குப்பின் அவளது வயிற்றிலிருந்து கைப்பேசி அகற்றப்பட்டது.
இப்போது அச்சிறுமி நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.



