காதலித்ததால் பிறப்புறுப்பை இழந்த ஆடவர்

காதலித்ததால் பிறப்புறுப்பை இழந்த ஆடவர்

பிக்சபே

13 Oct 2023 - 6:49 pm

1 mins read

பாட்னா: ஆடவரின் பிறப்புறுப்பை அவருடைய காதலியின் குடும்பத்தினர் துண்டாக்கிய அதிர்ச்சி நிகழ்வு இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றது.

அந்த ஆடவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் அவர் உயிருக்குப் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குற்றமிழைத்தவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

தன் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்க்க உதவிக்கு வருமாறு பொய் சொல்லி, அந்த ஆடவரை அவருடைய காதலி வரவழைத்ததாக ஆடவரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அந்த ஆடவர், அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்றதும், அங்கு அவரின் குடும்பத்தினர் அந்த ஆடவரைப் பிடித்து, அவரது பிறப்புறுப்பைத் துண்டாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

“வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் என் மகன் உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்றார். அப்போது, அவருடைய காதலியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பொய் சொல்லி என் மகனை வரவழைத்து, அவனைத் தாக்கி, பிறப்புறுப்பை வெட்டிவிட்டனர்,” என்று அவருடைய தந்தை விளக்கினார்.

கடந்த சில ஆண்டுகளாகவே அப்பெண்ணும் அவரும் பழகி வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரை மிரட்டி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

“என் மகனின் தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், கைப்பேசி ஆகியவற்றையும் அவர்கள் பிடுங்கிக்கொண்டனர்,” என்று அந்த ஆடவரின் தந்தை கூறினார்.

இதனைத் தொடர்ந்து, முசாஃபர்பூர் நகரக் காவல்துறை, அப்பெண்ணின் குடும்பத்தினர்மீது வழக்குப்பதிவு, தலைமறைவாகிவிட்ட அவர்களைத் தேடி வருகிறது.

குறிப்புச் சொற்கள்