இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இன்றைய மாறிவரும் உலகில் அனைத்துலக ஊழியரணி தேவை என்று கூறியுள்ளார்.
அனைத்துலக ஊழியரணிக்கான தேவையிலிருந்து நாடுகள் தப்பிக்க முடியாது என்ற அவர், தேசிய மக்கள்தொகை காரணமாக பல நாடுகளில் அந்தத் தேவை பூர்த்திசெய்யப்படாமல் இருக்கிறது என்றார்.
வர்த்தக, வரி சவால்கள், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குறியேறிகளைக் கடுமையாக எதிர்க்கும் போக்கு, ஹெச்-1பி விசாக்களுக்கான புதிய 100,000 டாலர் கட்டணம் ஆகியவற்றை திரு ஜெய்சங்கர் குறிப்பிட்டு பேசினார்.
அனைத்துலக வேலையிடத்துக்கு ஏற்ற அனைத்துலக ஊழியரணிக்கான கட்டமைப்பை உருவாக்கப்படும்படி திரு ஜெய்சங்கர் அழைப்புவிடுத்தார்.
“அனைத்துலக ஊழியரணியை எங்கு வைத்து உருவாக்குவது என்பது அரசியல் விவாதமாக இருக்கலாம். ஆனால் அதிலிருந்து தப்பிக்க முடியாது. ஊழியரணிக்கான தேவையையும் மக்கள்தொகையையும் பார்த்தால் பல நாடுகளில் மக்கள்தொகை காரணமாக அந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாமல் போகிறது,” என்றார் அவர்.
தொழில்நுட்ப ரீதியாக, வர்த்தக ரீதியாக, வேலையிடம் ரீதியாக அனைவரும் கூடிய விரைவில் வெவ்வேறு சூழல்களில் காணப்படுவோம் என்ற அவர், இன்றைய கலக்கம் நிறைந்த சூழலில், குறிப்பாக மிகப்பெரிய நாடுகள் மீள்திறன் மிக்க திறனாளர்களை உருவாக்குவது மிகவும் முக்கியம் என்றார்.
அதில்தான் இந்தியாவும் அதிகம் கவனம் செலுத்துகிறது என்று திரு ஜெய்சங்கர் கூறினார்.
தேசிய அளவிலான திறனாளர்களை உருவாக்கி தேசிய அளவிலான அனுபவங்களைக் கொண்டிருக்கும்போது மற்றவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்ற அவர், இந்தியாவின் மின்னிலக்கப் பொது உள்கட்டமைப்பைக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பல சமூகங்கள் இந்தியாவின் அந்தக் கட்டமைப்பு காலத்திற்கு ஏற்ப இருக்கிறது என்று கருதுவதுடன் ஐரோப்பியக் கட்டமைப்பைவிட அமெரிக்கக் கட்டமைப்பைவிட எளிதில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது என்று திரு ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.