புதுடெல்லி: இறக்குமதிக் கட்டுப்பாடுகளாலும் வரி உயர்வாலும் கடந்த மே மாதத்தில் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி கணிசமாகக் குறைந்தது.
2025 மே மாதத்தை ஒப்புநோக்க, இவ்வாண்டு மே மாதம் தங்கத்தின் இறக்குமதி அளவு ஏறத்தாழ 22 விழுக்காடு சரிந்து, 24 டன்னாகக் குறைந்தது. கடந்த ஏப்ரல் மாத (45.6 டன்) இறக்குமதியுடன் ஒப்பிடுகையில், இது 47.58 விழுக்காடு குறைவு.
அதுபோல, கடந்த மே மாதம் 33 டன் வெள்ளி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. இது, 2025 மே மாதத்தைவிட 94 விழுக்காடு குறைவு. அத்துடன், 2023 பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு இதுவே ஆகக் குறைவான இறக்குமதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில, இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு கூடியது.
மத்திய வர்த்தக அமைச்சுத் தரவுகளின்படி, 2025 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு மே மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி மதிப்பு 34 விழுக்காடு உயர்ந்து, 3.416 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் அம்மதிப்பு 2.549 பில்லியன் டாலராக இருந்தது.
மத்திய வர்த்தக அமைச்சுத் தரவுகளின்படி, கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு மே மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி மதிப்பு 34 விழுக்காடு உயர்ந்து, 3.416 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் இதன் மதிப்பு 2.549 பில்லியன் டாலராக இருந்தது.
மாறாக, இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளியின் மதிப்பு குறைந்தது. இவ்வாண்டு மே மாதம் 75 மில்லியன் டாலர் மதிப்பிலான வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டது. இது, 2025 மே மாதத்தைக் காட்டிலும் 86.85 விழுக்காடு குறைவு.
தொடர்புடைய செய்திகள்
அந்நியச் செலாவணி இருப்பின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், கடந்த மே மாதம் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரிகளை 6 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக இந்திய அரசு உயர்த்தியது.
இந்தக் கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி பெரிதும் சரிந்துவிட்டதாகத் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

