ஏழைகளின் எட்டாக்கனியாக மாறும் தங்கம்; ஒரு கிராம் 15,000 ரூபாயைக் கடந்தது

1 mins read
dae39cb8-6bbd-4236-b5b7-118b53953d96
சென்னையில் சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,200க்கு விற்பனை ஆனது. - படம்: கலிங்கா டிவி

சென்னை: சென்னையில் திங்கட்கிழமை (ஜனவரி 26) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.15,025க்கு விற்பனை ஆனது.

அதன்படி, சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,200க்கு விற்கப்பட்டது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை முதன்முறையாக 15,000 ரூபாயைக் கடந்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இனிவரும் நாள்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பே இல்லை எனக் கூறப்படுகிறது.

திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த வசதிகுறைந்த மக்கள் தற்போது கவலையில் மூழ்கி உள்ளனர்.

ஏழைகளின் எட்டாக்கனியாக தங்கம் மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.375 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.10,000 உயர்ந்து ரூ. 3,75,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அண்மைக் காலமாக தங்கமும் வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வருகின்றன.

முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.275 அதிகரித்து ரூ.16,391க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் 24 காரட் தங்கம் ரூ. 1,31,128 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்